×

இண்டியன் வெல்ஸ் டென்னிஸ்: அரையிறுதியில் ஹாலெப், இகா ஸ்விடெக்

இண்டியன்வெல்ஸ்: அமெரிக்காவின் இண்டியன் வெல்ஸ் நகரில் பிஎன்பி பாரிபாஸ் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்து வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இன்று நடந்த கால் இறுதி போட்டியில் 30 வயதான ருமேனியாவின் சிமோனா ஹாலெப், குரோஷியாவின் பெட்ரா மார்டிக் (31) மோதினர்.

இதில் 6-1, 6-1 என்ற நேர் செட்டில் ஹாலெப் வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தார். மற்றொரு கால் இறுதியில், 3ம் நிலை வீராங்கனையான 20 வயது போலந்தின் இகா ஸ்விடெக் 6-1, 6-0 என எளிதாக அமெரிக்காவின் மேடிசன் கீசை (27) வீழ்த்தினார். ஆடவர் ஒற்றையரில் ஸ்பெயினின் ரபேல் நடால், ஆஸ்திரேலியாவின் நிக் கிர்கியோஸ், ரஷ்யாவின் ஆண்ட்ரி ரூப்லெவ், பல்கேரியாவின் கிரிகோர் டிமிட்ரோவ் ஆகியோர் கால் இறுதிக்கு தகுதிபெற்றனர்.

Tags : Indian Wells Tennis ,Halep ,Iga Swidek , Indian Wells Tennis: Halep, Iga Swidek in the semifinals
× RELATED மயாமி ஓபன் டென்னிஸ் ஹாலெப்பை வீழ்த்தினார் படோசா