×

வீட்டிற்கு வந்தால் சோறு போடுவீர்களா என முதல்வர் கேள்வி... கறி சோறு போடுவதாக நரிக்குறவ மக்கள் உற்சாக பதில்!!

சென்னை : ஆவடியில் வசிக்கும் நரிக்குறவர் மக்களிடம் காணொளி வழியாக பேசிய முதல்வர் ஸ்டாலின், வீட்டிற்கே நேரில் வந்து கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக கோரிக்கை வைத்தார். நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பதால் தாங்கள் சந்திக்கும் சமூக புறக்கணிப்பு குறித்து மாணவி திவ்யா பேசிய காணொளி சமூக வலைத்தளங்களில் கவனம் பெற்றது. இதையடுத்து நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த பள்ளி மாணவிகள் ப்ரியா, திவ்யா மற்றும் தர்ஷினி ஆகியோரை நேரில் அழைத்து பேசிய முதல்வர் ஸ்டாலின், அவர்களின் கல்விக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதி அளித்தார்.

இந்த நிலையில் பால்வளத்துறை அமைச்சர் நாசர், ஆவடியில் உள்ள நரிக்குறவர் காலனிக்கு சென்று அவர்களது குறைகளை கேட்டறிந்தார். அப்போது நாசரின் செல்போன் மூலம் காணொளி வாயிலாக நரிக்குறவர் மக்களிடம் முதல்வர் ஸ்டாலின் பேசினார். அப்போது இன்னும் ஒரு வாரத்தில் ஆவடி நரிகுறவர் காலனிக்கு நேரில் வருவதாக முதல்வர் உறுதி அளித்தார்.நான் உங்கள் வீட்டிற்கு வந்தால் உணவு தருவீர்களா என முதல்வர் கேட்டதற்கு கரி விருந்து போடுவதாக நரிக்குறவர்கள் உற்சாகத்துடன் பதில் அளித்தனர். மாணவர்கள் தங்களுக்கு சாதி சான்றிதழ்கள் வழங்குமாறு கோரிக்கை வைத்தனர். அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றுவதாக முதல்வர் உறுதி அளித்தார்.

Tags : Chief Minister ,Narikkurava , Narikkuvar, people, Avadi, chief, Stalin
× RELATED பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல்...