ஹிஜாப் வழக்கில் உயர்நீதிமன்றம் தீர்ப்பு கர்நாடகா முழுவதும் இன்று முழு அடைப்பு போராட்டம்: இஸ்லாமிய அமைப்புகள் அழைப்பு

பெங்களூரு: கர்நாடகாவில் பள்ளி, கல்லூரிகளில் ஹிஜாப் அணிய தடை விதித்து அரசு பிறப்பித்துள்ள உத்தரவுக்கு ஆதரவாக கர்நாடக உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு அதிருப்தி தெரிவித்து இன்று மாநில முழு அடைப்பு போராட்டத்திற்கு இஸ்லாமிய அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளது. இது குறித்து கர்நாடக மாநில இஸ்லாமிய மத குரு (அமீரே சரியத் )

மவுலானா சகீர் அகமத் ரசாதி செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘ஹிஜாப் அணிய அரசு விதித்த தடை சரியே என கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இந்த தீர்ப்புக்கு எதிராக இன்று மாநிலம் தழுவிய பந்த் நடத்த இஸ்லாமிய அமைப்புகள் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. ஹிஜாப் விவகாரத்தில் அனைத்து இஸ்லாமிய அமைப்புகளை சேர்ந்தவர்களும் தங்களுக்கு ஆதரவு அளிக்கும் அனைவரும் தங்களது வணிக வளாகங்களை  ஒரு நாள் அடைத்து இந்த முழு அடைப்பு வெற்றி பெற ஆதரவு அளிக்க வேண்டும்’ என கோரிக்கை விடுத்தார்.

தேர்வை புறக்கணித்த 20 மாணவிகள்: யாதகிரி மாவட்டம், சுரபுரா தாலுகா, கெம்பாலி கிராமத்தில் உள்ள அரசு முதல்நிலை கல்லூரியில் 27 இஸ்லாமிய மாணவிகள் இரண்டாமாண்டு பியூசி படித்து வருகிறார்கள். அதில் 6 மாணவிகள் மட்டும் நேற்று ஹிஜாப் அணியாமல் திருப்புதல் தேர்வு எழுதினர். மீதியுள்ள 20 மாணவிகள் தேர்வு எழுதாமல் புறக்கணித்தனர்.

Related Stories: