அண்ணன் வீட்டில் தங்கிய கம்பெனி ஊழியர் தற்கொலை

ஆவடி: ஆவடி அடுத்த அண்ணனூர், சிவசக்தி நகர், 1-வது அவென்யூ வசிப்பவர் ராகேஷ்குமார்(27). எழும்பூர் ரயில்வே ஊழியர். இவரது தம்பி தீபக் (24). தனியார் கம்பெனி ஊழியர். இவர்களது சொந்த ஊர் பீகார் மாநிலம். இருவரும் ஒரே வீட்டில் தங்கியுள்ளனர். கடந்த 14ம் தேதி ராகேஷ்குமார் சொந்த ஊரான பீகாருக்கு சென்றுவிட்டார். வீட்டில் தீபக் மட்டும் தனியாக இருந்தார்.

நேற்று முன்தினம் ராகேஷ்குமார், தீபக்கிற்கு போன் செய்துள்ளார். அவர் போனை எடுக்கவில்லை. ராகேஷ்குமார் பக்கத்து வீட்டில் வசிக்கும் சத்யேந்தர் என்பவரை தொடர்பு கொண்டார். அவர் உடனடியாக தீபக்கை பார்க்க வீட்டுக்கு வந்தார். வீடு பூட்டியிருந்தது. சத்யேந்தர், ஜன்னல் வழியாக பார்த்தபோது, தீபக் படுக்கையறையில் மின்விசிறியில் தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த திருமுல்லைவாயல் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தை மீட்டு கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பினர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Related Stories: