×

சில்லிபாய்ண்ட்ஸ்

* ஐசிசி மகளிர் உலக கோப்பையில் நேற்று இங்கிலாந்து அணியுடன் மோதிய இந்தியா மோசமான பேட்டிங்கால் தோல்வியைத் தழுவியது. பே ஓவல் மைதானத்தில் நடந்த இப்போட்டியில் இந்தியா 36.2 ஓவரில் 134 ரன்னுக்கு சுருண்டது (மந்தனா 35, ரிச்சா 33, ஜுலன் 20). இங்கிலாந்து 31.2 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 136 ரன் எடுத்து வென்றது (கேப்டன் நைட் 53*, சைவர் 45).

* காயம் காரணமாக ஓய்வெடுத்து வந்த ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகடமி வளாகத்தில் நேற்று நடந்த ‘யோ யோ’ பரிசோதனையில் உற்சாகமாகப் பங்கேற்று உடல்தகுதியை நிரூபித்தார்.

* ஐசிசி டெஸ்ட் பந்துவீச்சு தரவரிசையில் இந்தியாவின் பும்ரா 6 இடங்கள் முன்னேறி 4வது இடத்தை பிடித்துள்ளார். பேட்டிங் தரவரிசையில் ஷ்ரேயாஸ் 40 இடங்கள் முன்னேறி 37வது இடத்தை பிடித்த நிலையில், கோஹ்லி 4வது இடத்தில் இருந்து 9வது இடத்துக்கு பின்தங்கினார்.

Tags : Chillipoints , Chillipoints
× RELATED சில்லிபாய்ன்ட்ஸ்