பிஎன்பி பாரிபா ஓபன் டென்னிஸ்: காலிறுதியில் படோசா

இண்டியன் வெல்ஸ்: அமெரிக்காவில் நடைபெறும் பிஎன்பி பாரிபா ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் விளையாட, நடப்பு சாம்பியன் பவுலா படோசா தகுதி பெற்றார்.

4வது சுற்றில் கனடாவின் லெய்லா பெர்னாண்டசுடன் மோதிய படோசா (ஸ்பெயின்) 6-4, 6-4 என்ற நேர் செட்களில் வெற்றியை வசப்படுத்தினார். இப்போட்டி 1 மணி, 42 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது.

மற்றொரு 4வது சுற்றில் போலந்தின் இகா ஸ்வியாடெக் 4-6, 6-2, 6-3 என்ற செட் கணக்கில் ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பரை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். விறுவிறுப்பான இப்போட்டி 2 மணி, 8 நிமிடத்துக்கு நீடித்தது. முன்னணி வீராங்கனைகள் சிமோனா ஹாலெப் (ருமேனியா), மேடிசன் கீஸ் (அமெரிக்கா), எலனா ரிபாகினா (கஜகஸ்தான்), மரியா சாக்கரி (கிரீஸ்), வெரோனிகா குதெர்மதோவா (ரஷ்யா) ஆகியோரும் காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

Related Stories: