ஐபிஎல்லில் சுரேஷ் ரெய்னா

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் சுரேஷ் ரெய்னா(35). ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 12 சீசன்களில் விளையாடினார். சின்ன தல என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும்  அவரை இந்த முறை ஏலத்தில் எந்த அணியும் எடுக்கவில்லை. சிஎஸ்கே அணியும் அவரை கைவிட்டது. இந்நிலையில் ஐபிஎல்லில் புதிய அவதாரத்தில் அவர் களம் இறங்குகிறார். வர்ணனையாளராக அவர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ரவிசாஸ்திரியுடன் இணைந்து இந்தி வர்ணனை செய்ய உள்ளார்.

Related Stories: