சஞ்சய் லீலா பன்சாலியுடன் அல்லு அர்ஜுன் சந்திப்பு

மும்பை: இயக்குனரும் தயாரிப்பாளருமான சஞ்சய் லீலா பன்சாலியை அல்லு அர்ஜுன் சந்தித்து பேசினார். புஷ்பா படம் மூலம் பான் இந்தியா ஸ்டார் ஆகிவிட்டார் அல்லு அர்ஜுன். இப்போது புஷ்பா 2 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ளது. இந்நிலையில் மீண்டும் பான் இந்தியா படத்தில் அல்லு அர்ஜுன் நடிக்க விரும்புகிறார். இதனால் ஏற்கனவே கமிட் ஆகி இருந்த ஒரு படத்தையும் தள்ளிவைத்திருக்கிறார். சமீபத்தில் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் வெளியான கங்குபாய் கத்தியவாடி இந்தி படம் ஹிட்டானது. தொடர்ந்து அடுத்தடுத்து ஹிட் படங்களை சஞ்சய் லீலா பன்சாலி கொடுத்து வருவதால் அவரது இயக்கத்தில் நடிக்க அல்லு அர்ஜுன் ஆர்வம் காட்டுவதாக கூறப்படுகிறது. இதனாலேயே இந்த சந்திப்பு நடந்ததாகவும் கூறப்படுகிறது. கதை சரியாக அமைந்தால் இந்த இருவரும் சேர்ந்து பணியாற்றுவார்கள் என பாலிவுட் வட்டாரத்தில் கூறப்பட்டது.

Related Stories: