சூர்யா ஜோடியாகும் கிரித்தி ஷெட்டி

சென்னை: பாலா இயக்கும் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக கிரித்தி ஷெட்டி நடிக்க உள்ளார். தெலுங்கில் உப்பென்னா, பங்கார்ராஜு, ஷியாம் சிங்க ராய் ஆகிய படங்களில் நடித்தவர் கிரித்தி ஷெட்டி. இப்போது லிங்குசாமி இயக்கத்தில் ராம் பொத்தினேனி நடிக்கும் வாரியர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் மொழிகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் இப்போது முதல்முறையாக கிரித்தி ஷெட்டி தமிழில் நடிக்க உள்ளார். பாலா இயக்கும் படத்தை தயாரித்து நடிக்கிறார் சூர்யா. இதில் அவருக்கு ஜோடியாக நடிக்க கிரித்தி ஷெட்டி தேர்வாகியுள்ளார். படத்தில் முக்கிய வேடத்தில் அதர்வா, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோரும் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.

Related Stories: