புதிய மருத்துவனைக்கு அடிக்கல் நாட்டு விழா: க.சுந்தர் எம்எல்ஏ துவக்கி வைத்தார்

உத்திரமேரூர்: உத்திரமேரூர் பேரூராட்சியில் ரூ.60 லட்சம் மதிப்பிலான புதிய மருத்துவமனை கட்டிடத்துக்கான  அடிக்கல் நாட்டு விழா  நடந்தது. இதில் க.சுந்தர் எம்எல்ஏ கலந்து கொண்டு, பணியை துவக்கி வைத்தார்.

உத்திரமேருர் பேரூராட்சி 13வது வார்டு பாவோடு தோப்பு தெருவில் பழைய  பள்ளி கட்டிடத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் இயங்குகிறது. இப்பள்ளியில் அருகில், நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்துக்காக ஒதுக்கப்பட்டுள்ள  இடத்தில் மருத்துவமனை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்பேரில், ரூ.60 லட்சம் மதிப்பில் மருத்துவமனை கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது.

வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் உமாதேவி தலைமை தாங்கினார்.  பேரூராட்சி மன்ற தலைவர் சசிகுமார், செயல் அலுவலர் லதா, ஒன்றிய செயலாளர்கள் ஞானசேகரன், குமார், பாரிவள்ளல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  காஞ்சி திமுக தெற்கு மாவட்ட செயலாளர் க. சுந்தர் எம்எல்ஏ கலந்து கொண்டு ரூ.60 லட்சத்தில் கட்டப்பட உள்ள புதிய மருத்துவமனை கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டி பணியை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் சோழனூர் ஏழுமலை, வார்டு உறுப்பினர் பரணி, குணசேகரன், கோவிந்தராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: