×

சோனியா, ராகுல் பற்றிய விமர்சனம் ஆர்எஸ்எஸ்.காரர் போல் பேசுகிறார் கபில்சிபல்: காங்கிரஸ் குற்றச்சாட்டு

புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர்கள் பற்றி விமர்சிக்கையில் கபில்சிபல் ஏன் ஆர்எஸ்எஸ், பாஜ.வினர் போன்று பேசுகிறார்? என்று மக்களவை காங்கிரஸ் கொறடா மாணிக்கம் தாகூர் கேள்வி எழுப்பி உள்ளார். நடந்து முடிந்த 5 மாநில தேர்தலில் தோல்வி குறித்து கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இதில் கலந்து கொண்ட பிறகு பேட்டியளித்த காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல், ‘காங்கிரஸ் தலைமையில் இருந்து காந்தி குடும்பத்தினர் ஒதுங்கிக் கொண்டு, மற்ற தலைவர்களுக்கு தலைமை தாங்கி வழிநடத்த வாய்ப்பு அளிக்க வேண்டும்.

காங்கிரஸ் கட்சி அனைவருக்குமானதாக இருக்க வேண்டும் என விரும்புகிறேன். சிலர் அது குடும்பத்திற்கானது என்று நினைக்கின்றனர்,’ என தெரிவித்தார். இவர் ஜி23 எனப்படும் அதிருப்தி தலைவர்கள் குழுவை சேர்ந்தவர். இவருடைய இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இதற்கு பதிலளித்து காங்கிரசின் மக்களவை கொறடா மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், `நேரு - காந்தி குடும்பத்தினரை காங்கிரஸ் தலைமையில் இருந்து வெளியேற்ற ஆர்எஸ்எஸ், பாஜ ஏன் விரும்புகிறது என்றால், அவர்களின் தலைமை இல்லாமல் போனால் காங்கிரசும் ஜனதா கட்சி போன்று ஆகிவிடும்.

அதன் பிறகு, காங்கிரசையும் இந்தியாவின் அடையாளத்தையும் அழிப்பது அவர்களுக்கு எளிது. இது கபில் சிபலுக்கு தெரியும். ஆனால், இது தெரிந்தும் காந்தி குடும்பத்தை பற்றி விமர்சிக்கும் போது அவர் ஏன் ஆர்எஸ்எஸ், பாஜ.வினரை போன்று பேசுகிறார்?’ என்று கூறியுள்ளார். இதனிடையே, காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ டிவிட்டரில் மகாத்மா காந்தி, ஜவகர்லால் நேரு, இந்திரா காந்தி உள்ளிட்ட அக்கட்சியின் முன்னாள் தலைவர்களின் வீடியோவை வெளியிட்டு, `தொடர்ந்து போராடுவோம், மீண்டு வருவோம், உங்களுக்காக தொடர்ந்து குரல் கொடுப்போம்,’ என்று பதிவிடப்பட்டுள்ளது.

Tags : Sonia ,Rahul ,Kapil Sibal ,Congress , Criticism of Sonia, Rahul speaks like RSS corporal Kapil Sibal: Congress accusation
× RELATED விசாரணை அமைப்புகளை தவறாக...