தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் தமிழ்நாடு பசுமை சாம்பியன் விருது: 31ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

சென்னை: தமிழ்நாடு பசுமை சாம்பியன் விருது விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் வரும் 31ம் தேதி வரை நீட்டிப்பு செய்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் அறிவித்துள்ளது. இது குறித்து மாசு கட்டுப்பாடு வாரியம் வெளியிட்ட அறிக்கை: தமிழக அரசின், சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் தங்களை முழுமையாக அர்ப்பணித்தவர்களுக்கு அதாவது தனிநபர்கள், அமைப்புகளுக்கு பசுமை சாம்பியன் விருது 100 நபர்களுக்கு வழங்கி, தலா ரூ.1,00,000 வீதம் பண முடிப்பும் வழங்க உள்ளது.

மேற்கண்ட விருதுக்கான தகுதியான முன்மொழிவுகள் தேவையான ஆதாரங்கள் மற்றும் புகைப்படங்களுடன் கடந்த 15ம் தேதிக்குள் மாவட்ட ஆட்சியரிடம் சமர்ப்பிப்பதற்கான செய்தி குறிப்பு வெளியிடப்பட்டது. சில மாவட்டங்களில் 2022 ஆண்டு மார்ச் மாதத்தில் செய்தி வெளியிடப்பட்டது. தனிநபர், நிறுவனங்கள் மற்றும் பிறஅமைப்புகளிடமிருந்து தரமான முன்மொழிவுகள் பெறும் பொருட்டு விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் 31ம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்ப படிவம், வழிகாட்டுதல்கள் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய வலைதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: