தொழிலதிபர் வீட்டில் 63 சவரன் நகை மாயம்: 2 செவிலியர்களுக்கு வலை

சென்னை: சென்னை ஆயிரம்விளக்கு கிரீம்ஸ் சாலை கம்மாளர் தெருவை சேர்ந்தவர் பிரகாஷ் (57). தொழிலதிபரான இவர், அண்ணா சாலையில் எலக்ட்ரிக்கல் பொருட்கள் மொத்த வியாபாரம் செய்து வருகிறார். இவருடன் வசிக்கும் தாய் பிஸ்தாபாயை (94), கவனிக்க பிரபல நிறுவனம் மூலம் 2 செவிலியர்களை நியமித்து இருந்தார். இந்நிலையில், தனது தாயின் அறையில் உள்ள பீரோவை, பிரகாஷ் திறந்து பார்த்த போது, அதில் வைத்திருந்த இரும்பு பெட்டி மாயமாகி இருந்தது. அதில் தனது தாயின் கம்மல், செயின், வளையல் என 63 சவரன் நகைகள் இருந்தன.

இதுகுறித்து ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் பிரகாஷ் புகார் அளித்தார். விசாரணையில், கடந்த 10ம் தேதிக்கு பிறகு 2 செவிலியர்களும் வேலைக்கு வரவில்லை என்று தெரியவந்தது. மேலும், சிசிடிவி பதிவுகளை வைத்து பார்த்த போது, கடந்த 10 தேதி காலை 11.30 மணிக்கு செவிலியர்கள் வீட்டிற்கு வந்து, பிறகு ஒரு பெட்டியுடன் வெளியே செல்லும் கட்சிகள் பதிவாகி இருந்தது. இதனால் செவிலியர்கள் நகையுடன் கூடிய இரும்பு பெட்டியை திருடி சென்றார்களா அல்லது வேறு யாரேனும் வீட்டிற்குள் புகுந்து கொள்ளையடித்தார்களா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: