×

நீட் விலக்கு உட்பட 7 மசோதாக்களை கிடப்பில் போட்டுள்ள தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை பதவியில் இருந்து நீக்க வேண்டும்: டி.ஆர்.பாலு ஆவேசம்

டெல்லி : நீட் விலக்கு உட்பட 7 மசோதாக்களை கிடப்பில் போட்டுள்ள தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் திமுக எம்பிக்கள் குரல் எழுப்பினர். மக்களவையில் நீட் விலக்கு மசோதா தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசிய நாடாளுமன்ற திமுக குழு தலைவர் டி.ஆர்.பாலு, தமிழ்நாட்டின் முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற பிறகு 7 மசோதாக்களுக்கு மேல் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டது.ஆளுநர் கையெழுத்திட்டு குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு மசோதாக்களை அனுப்ப வேண்டும்.

அனைத்து மசோதவையும் கையெழுத்து போடாமல் ஆளுநர் வைத்துள்ளார்.காட்டாட்சி நடக்கிறதா என்ற கேள்வி எழுகிறது.அரசு நிர்வாகம் சட்டப்படி நடக்க வேண்டும். கூட்டுறவு சங்கம் தொடர்பான மசோதாவும் 6 மாதமாக கிடப்பில் உள்ளது.அந்த மசோதாவையும் ஆளுநர் கிடப்பில் போட்டுள்ளார், சட்டப்படி செயல்படாத ஆளுநரை பதவியில் இருந்து நீக்க வேண்டும், என்றார்.ஆளுநர் விவகாரம் மாநில பிரச்சனை எனக்கூறி டி.ஆர்.பாலு தொடர்ந்து பேச சபாநாயகர் ஓம் பிர்லா அனுமதி மறுத்தார். இதனால் ஆவேசம் அடைந்த திமுக எம்பிக்கள் சட்டத்தை மதிக்காமல் செயல்படும் தமிழக ஆளுநர் ரவியை பதவி நீக்க வேண்டும் என்று முழக்கமிட்டனர்.


Tags : Tamil Nadu ,Governor RN ,Ravi ,DR ,Palu , Need Exemption, Tamil Nadu, Governor, RN Ravi, DR Palu, Obsession
× RELATED ராஜஸ்தான் தினத்தை ஒட்டி அம்மாநில மக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து..!!