×

காங். காரிய கமிட்டி முடிந்த நிலையில் ஜி-23 தலைவர்கள் நாளை சந்திப்பு

புதுடெல்லி: ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி  அடைந்தது. காங்கிரஸ் அதிருப்தி தலைவர்களின் குழுவின் (ஜி-23) மூத்த தலைவர்  குலாம் நபி ஆசாத்தின் டெல்லி வீட்டில், தேர்தல் தோல்வி குறித்து சில  தலைவர்கள் ஆலோசனை நடத்தினர். அதன் தொடர்ச்சியாக காங்கிரஸ் காரிய கமிட்டி  கூட்டம் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடந்தது.  அப்போது சோனியா காந்தியே இடைக்கால தலைவராக ெதாடர கூட்டத்தில்  தீர்மானிக்கப்பட்டது. இந்நிலையில் ஜி-23 தலைவர்கள் தங்களது எதிர்கால அரசியல் நடவடிக்கை குறித்து விவாதிக்க நாளை டெல்லியில் சந்திக்கின்றனர்.

இந்த கூட்டத்தில் ஜி - 23 தலைவர்கள் மட்டுமின்றி, காங்கிரஸ் கட்சியின் இதர தலைவர்களும் கலந்து கொள்ள உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த கூட்டம் நாளை இரவு 7 மணிக்கு நடைபெறும் என்று தெரிகிறது. இடம் இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.


Tags : G ,-23 , Cong. Working Committee, G-23 Chair, Meeting
× RELATED ஜி.எஸ்.டி. வரி அல்ல, வழிப்பறி என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்