×

திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயில் தேர் திருவிழா : விமரிசையாக நடந்தது

துரைப்பாக்கம்: சென்னையில் பழமை வாய்ந்த கோயில்களில் ஒன்றாக திருவான்மியூர் மருந்தீஸ்வரர் திருக்கோவில் திகழ்கிறது. இக்கோயிலில் இந்தாண்டு பங்குனி திருவிழா கடந்த 9ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் சிறப்பு பூஜைகளுடன் சுவாமி ஊர்வலமும் நடந்து வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர் திருவிழா இன்று காலை விமரிசையாக நடந்தது. திருத்தேரில் எழுந்தருளிய சுந்தரேசுவரர், அம்பாளுக்கு பல்வேறு பூஜைகள் செய்யப்பட்டு தேர் புறப்பட்டது. பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் நான்கு மாடவீதிகளிலும் வீதி உலா நடந்தது.

திரளான பக்தர்கள், தேரை வடம் பிடித்து இழுத்தனர். வழிநெடுகிலும் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு ஆங்காங்கே நீர், மோர், பிரசாதம் வழங்கப்பட்டது. திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளான திருக்கல்யாணம் 17ம் தேதியும், தெப்பல் உற்சவம் 19ம் தேதியும் நடக்கிறது. ஏற்பாடுகளை உதவி ஆணையர் பாலசுப்பிரமணியன், செயல் அலுவலர் அருட்செல்வன் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்துள்ளனர்.

Tags : Thiruvanmiyur Marundeeswarar Temple Chariot Festival , Thiruvanmiyur, Marundeeswarar Temple, Chariot Festival
× RELATED வேளச்சேரி – பரங்கிமலை இடையிலான...