×

டெல்லியில் நடைபெறும் திமுக அலுவலக திறப்பு விழாவில் பங்கேற்க சோனியா காந்தி, ராகுல்காந்திக்கு திமுக எம்.பி. டி.ஆர்.பாலு நேரில் அழைப்பு

டெல்லி: டெல்லியில் நடைபெறும் திமுக அலுவலக திறப்பு விழாவிற்கு வருமாறு காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி, பொதுச்செயலாளர் ராகுல்காந்தி ஆகியோரை திமுக நாடாளுமன்ற குழு உறுப்பினர் டி.ஆர்.பாலு நேரில் சந்தித்து அழைப்பு விடுத்துள்ளார். டெல்லி தீன்தயாள் உபாத்யாயா மார்க்கில் கட்டப்பட்டுள்ளது. இந்த அலுவலகத்தின் அனைத்து கட்டுமான பணிகளும் நிறைவடைந்துள்ள நிலையில் வரும் ஏப்.2-ம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படவுள்ளது.

டெல்லியில் கட்டப்பட்டுள்ள திமுக அலுவலகத்தை கட்சித் தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொள்ள உள்ளனர். அந்த விழாவில் கலந்துகொள்ளுமாறு இன்று நாடாளுமன்ற வளாகத்தில் வைத்து திமுக நாடாளுமன்ற குழு உறுப்பினர் டி.ஆர்.பாலு, காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி மற்றும் எம்.பி. ராகுல் காந்தியை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார்.

இதுமட்டும் அல்லாமல் தலைநகர் டெல்லியில் உள்ள மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜா ஆகியோரையும் நேரில் சந்தித்து 2-ம் தேதி நடைபெறவுள்ள திராவிட முன்னேற்ற கழக அலுவலக திறப்பு விழாவிற்கு வரும் படி அழைப்பு விடுத்துள்ளார். இதனை தொடர்ந்து பல்வேறு கட்சிகளுடைய தலைவர்களையும் டி.ஆர்.பாலு நேரில் சந்தித்து அழைப்பு விடுவதற்கு திட்டமிட்டுள்ளார்.


Tags : Sonia Gandhi ,Rakulkandi ,Dimuka ,Delhi ,Palu , Delhi, DMK office opening ceremony, Sonia Gandhi, Rahul Gandhi, DMK MP. T.R.balu
× RELATED இந்தியாவின் ஜனநாயகத்தின்...