×

காற்றழுத்த கருவிகள் உற்பத்தி திட்டம் : முதல்வர் முன்னிலையில் ரூ.1,588 கோடி முதலீட்டில் சாம்சங் நிறுவனத்துடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்

சென்னை: சாம்சங் நிறுவனத்தில் ரூ.1,588 கோடி முதலீட்டில் காற்றழுத்த கருவிகள் உற்பத்தி திட்டத்திற்கான  புரிந்துணர்வு ஒப்பந்தம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது. ஸ்ரீபெரும்புதூரில் ரூ.1,588 கோடியில் காற்றழுத்த கருவிகள் உற்பத்தி திட்டத்தை சாம்சங் நிறுவனம் தொடங்க உள்ளது. நடப்பாண்டில் சாம்சங் நிறுவனம் ரூ.1,800 கோடி அளவில் தமிழகத்தில் முதலீடு செய்ய உள்ளது என முதல்வர் உரையாற்றினார்.

ரூ.1588 கோடி முதலீடு கொண்ட ஒப்பந்த திட்டத்தால் 600 நபர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.  உலகளவில் சந்தை மதிப்பில் 8வது பெரிய நிறுவனமாக சாம்சங் உள்ளது. அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியே தமிழ்நாட்டின் வளர்ச்சி என்று கூறினார். முதலீடுகள் அதிகரிப்பதன் மூலம் வேலைவாய்புகள் பெருகி தொழில்துறை வளர்ச்சி அடையும் என பேசினார். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சாதனைகளை தொடர்ந்து நிறைவேற்றி வருகிறது திமுக என கூறினார்.


Tags : Government of Tamil Nadu ,Samsung ,Chief Minister , Pneumatic tools, production plan, CM, understanding
× RELATED அரசியல் சட்டப்படி அனைத்துக்...