×

உக்ரைன் - ரஷ்யா போரால் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு பாதிப்பில்லை.. பாதுகாப்பு குறித்த அச்சம் தேவையில்லை என நாசா திட்டவட்டம்!!

வாஷிங்டன் ; உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் தொடர்புடைய பதற்றங்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தின் செயல்பாடுகளில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்று அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா தெரிவித்துள்ளது. கடந்த வாரம் அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகளை எச்சரிக்கும் விதத்தில் பேசிய ரஷ்ய விண்வெளி ஆய்வு மையத்தின் தலைவர் டிமிட்ரி ரோகோஸின், ரஷ்யா மீதான மேற்கத்திய தடைகள் சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்தின் செயல்பாடுகளை பாதிக்கும் என்று கூறி இருந்தார். ஆய்வு நிலையத்தை சுற்றுப் பாதையில் வைத்திருக்க தேவையான விண்கலத்தின் செயல்பாட்டை சீர்குலைப்பதன் மூலம் சர்வதேச விண்வெளி நிலையம் செயல் இழந்து பூமியில் விழும் வாய்ப்பு இருப்பதாகவும் அவர் எச்சரிக்கை விடுத்து இருந்தார்.

இதனால் சர்வதேச விண்வெளி நிலையத்தின் பாதுகாப்பு குறித்து அச்சம் எழுந்த நிலையில், அங்குள்ள அமெரிக்கர்கள் உள்ளிட்ட விண்வெளி நிபுணர் குழு பூமிக்கு திரும்ப முடியுமா என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில் உக்ரைன், ரஷ்ய இடையிலான போர் தொடர்புடைய பதற்றங்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தின் செயல்பாடுகளில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்று நாசா தெரிவித்துள்ளது. தற்போது விண்வெளி ஆய்வு நிலையத்தில் உள்ள அமெரிக்க நிபுணர் மார்க் திட்டமிட்டபடி ரஷ்ய விண்கலமான சோயூஸ் மூலம் வரும் 30ம் தேதி பூமிக்கு திரும்புவார் என்று நாசா கூறியுள்ளது. இதற்கான உறுதிமொழியை ரஷ்ய விண்வெளி ஆய்வு மையமான ராஸ்காஸ்மோர்ஸ் அளித்திருப்பதை நாசா திட்ட அதிகாரி ஜோயல் தகவலை உறுதிப்படுத்தி உள்ளார். இதனிடையே ரஷ்ய விண்வெளி ஆய்வு நிறுவனமான ராஸ்காஸ்மோர்ஸ் அதன் நம்பகத்தன்மையை சந்தேகிக்கும் நிலையை கிதான் கூட்டாளர்களுக்கு ஏற்படுத்தாது என்று ரஷ்யா அறிவித்துள்ளது. 20 ஆண்டுகளாக நடைபெற்று வரும் விண்வெளி நிலைய பணிகள் ஒரு சில வாரங்கள் பூமியில் நடைபெறும் நிகழ்வுகளால் மாற்றம் அடைந்துவிடாது என்றும் ரஷ்யா கூறியுள்ளது.


Tags : Ukraine ,Russia ,International ,NASA , Ukraine, Russia, War, International Space Station, NASA
× RELATED உக்ரைனில் ரஷ்யா நடத்திய ஏவுகணைத்...