×

சேப்பாக்கம் எழிலகம் வளாகத்தில் உள்ள துணை போக்குவரத்து ஆணையர் அலுவலகத்தில் ரூ.35 லட்சம் பறிமுதல்: லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி நடவடிக்கை

சென்னை: சேப்பாக்கம்  எழிலகம் வளாகத்தில் உள்ள துணை போக்குவரத்து ஆணையர் அலுவலகத்தில் கணக்கில் காட்டப்படாத ₹35 லட்சம் பணத்தை லஞ்ச ஒழிப்புத் துறையினர் கைப்பற்றினர்.
சென்னை, சேப்பாக்கம் எழிலகம் வளாகத்தில் பொதுப்பணித்துறை அலுவலகம், பிற்படுத்தப்பட்டோர் நலவாரியம், ஆதிதிராவிடர் நலவாரியம், பசுமை தீர்ப்பாயம், குடிசை மாற்று வாரிய அலுவலகம், டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் அலுவலகம், மகளிர் ஆணையம், ஆறுமுகசாமி விசாரணை ஆணையம், வேளாண்மை துறை ஆணையர் அலுவலகம் மற்றும் போக்குவரத்து ஆணையர் அலுவலகம் 10க்கும் மேற்பட்ட அலுவலங்கள் அமைந்துள்ளன. சென்னை மாவட்டம், துணை போக்குவரத்து ஆணையர் அலுவலகமும் அந்த வளாகத்தில் உள்ளது.துணை ஆணையராக இருப்பவர் நடராஜன்.

இந்தநிலையில், இவர், தன்னுடைய அலுவலகத்தில் பணிபுரியும் 30 உதவியாளர்களிடம் இருந்து கண்காணிப்பாளர் பதவி உயர்வுக்காக தலா ₹5 லட்சம் வீதம் லஞ்சம் பெறுவதாக லஞ்ச ஒழிப்பு துறையினருக்கு ரகசியாக தகவல் கிடைத்தது.

இதைத் தொடர்ந்து, நேற்று சென்னை லஞ்ச ஒழிப்பு போலீசார், சென்னை எழிலகத்தில் உள்ள துணை போக்குவரத்து ஆணையர் அலுவலகத்தில் திடீர் என சோதனை நடத்தினர். இந்த சோதனையில் கணக்கில் காட்டப்படாத ₹35 லட்சம் பணத்தை நடராஜன் அலுவலகத்தில் இருந்து கைப்பற்றினர். இதையடுத்து, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து பணம் எங்கிருந்து வந்தது, ஒவ்வொரு ஊழியரிடம் எவ்வளவு வாங்கப்பட்டுள்ளது.

இதைப்போன்று ஏற்கனவே லஞ்சமாக பணம் வாங்கி கொண்டு பணி நியனம் ஏதும் செய்யப்பட்டுள்ளதா, இதுபோன்று பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதா, இந்த விவகாரத்தில் ேவறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தால் எழிலகம் வளாகத்தில் நேற்று பெரும்பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Deputy Transport ,Chepauk Ezhilagam , Rs 35 lakh seized from Deputy Transport Commissioner's office at Chepauk Ezhilagam premises: Anti-bribery action
× RELATED போக்குவரத்து விதிமுறை மீறல்; வாகன...