×

பங்குனி உத்திர பெருவிழா ஏகாம்பரநாதர் கோயிலில் வெள்ளி, மரத்தேரில் சுவாமி வீதி உலா: வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்

காஞ்சிபுரம்: பங்குனி உத்திர பெருவிழாவை முன்னிட்டு, காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில், வெள்ளி மற்றும் மரத்தேரில் வீதியுலா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் பங்குனி உத்திர திருக்கல்யாண திருவிழா ஆண்டுதோறும் நடத்தப்படும். இதைதொடர்ந்து, இந்தாண்டு திருவிழா கடந்த 8ம் தேதி தொடங்கியது. தொடர்ந்து ஏகாம்பரநாதர், ஏலவார்குழலி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் சிறப்பு பூஜைகள் நடந்தன.

விழாவையொட்டி சூரியபிரபை, சிம்மம், சந்திரபிரபை, பூதம், நாகம், வெள்ளி அதிகார நந்தி சேவை, வெள்ளி இடப வாகனம் உள்பட பல்வேறு வாகனங்களில் சிறப்பு அலங்காரத்துடன் ஏகாம்பரநாதர் தேரில் வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு ஏகாம்பரநாதர் தரிசனம் செய்கின்றனர். இதை தொடர்ந்து நேற்று முன்தினம் 63 நாயன்மார்களும் கண்ணாடி விமானத்தில் எழுந்தருளி வீதி உலா வந்தனர்.

இந்நிலையில், நேற்று காலை ஏகாம்பரநாதர், ஏலவார்குழலி அம்மன் அலங்கரித்த மரத்தேரில் வாணவேடிக்கைகள் முழங்க முக்கிய வீதிகளில் ஊர்வலமாக வந்தனர் . வழிநெடுகிலும் அம்மனுக்கு தீபாராதனைகள் நடந்தது. மரத்தேர் உற்சவத்தை முன்னிட்டு பக்தர்களுக்கு அன்னதானம், நீர்மோர், குளிர்பானங்கள் வழங்கப்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு மரத்தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

Tags : Uttara Peruvija Ekambaranathar Temple ,Swami Veedhi Ula ,Marather , Panguni Uttara Peruvija Ekambaranathar Temple Friday, Swami Veedhi Ula in Marather: Devotees holding a rope
× RELATED திருப்பதி கோயில் பிரம்மோற்சவம்: கற்பக...