×

டோனி, கோஹ்லியை பின்பற்றமாட்டேன்: ஆர்சிபி புதிய கேப்டன் டு பிளசிஸ் பேட்டி

பெங்களூரு: பெங்களூருவில் ரசிகர்களின் முன்னிலையில் ஐபிஎல் 2022 தொடரில் பெங்களூருவை வழிநடத்தும் புதிய கேப்டனாக தென் ஆப்பிரிக்காவின் அனுபவ வீரர் டுபிளசிஸ் அறிவிக்கப்பட்டார். அப்போது டுபிளசிஸ்  பேசியதாவது:- சென்னை அணியில் முதல் முறையாக எனது பயணத்தை தொடங்கிய போது கேப்டன்ஷிப் எப்படி இருக்கும் என்ற வித்தியாசமான எண்ணம் எனக்குத் தோன்றியது. அப்போது ஒரு கேப்டனாக எப்படி இருக்க வேண்டும் என நான் நினைத்ததற்கு அப்படியே நேர் எதிராக சென்னை அணி கேப்டன் டோனி இருந்தார்.

ஏனெனில் ஒரு தென்ஆப்பிரிக்க கலாச்சாரத்தை சேர்ந்த நான் முதல் முறையாக இந்திய சூழ்நிலையில் நுழையும்போது நான் நினைத்ததற்கு அப்படியே நேர்மாறாக டோனி உள்ளாரே என எனக்கு தோன்றியது. பொதுவாக கேப்டன்ஷிப் செய்வதில் நிறைய ஸ்டைல்கள் உள்ளது. இருப்பினும் எப்போதுமே நாம் நமக்கென்று ஒரு ஸ்டைலில் அணியை வழிநடத்த வேண்டும். அதுதான் கடினமான சூழ்நிலையில் நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை கற்றுக்கொடுக்கும். எனவே நான் விராட் கோஹ்லியாக இருக்க விரும்ப மாட்டேன்.

ஏனெனில் நான் கோஹ்லி கிடையாது. அதேபோல் நான் டோனி போலவும் வழி நடத்த மாட்டேன். ஆனால் சென்னையில் நான் விளையாடிய போது நிறைய அம்சங்களை கற்றுக்கொண்டு முதிர்ச்சி அடைந்துள்ளேன். எனவே அந்த பயணத்திற்காக மிகவும் பெருமைப்படுகிறேன்” என்றார்.

Tags : Tony ,Kohli ,RCB ,Du Plessis , Dhoni, Kohli will not follow: RCB New Captain Two Plus Interview
× RELATED சதம் விளாசினார் கோஹ்லி ஆர்சிபி 183 ரன் குவிப்பு