×

சிபிஎம் கிளைச் செயலாளர் சி.வேலுசாமி கொலை வழக்கு: 5 பேருக்கு 2 ஆயுள் தண்டனை விதித்து நாமக்கல் நீதிமன்றம் தீர்ப்பு

நாமக்கல்: பள்ளிப்பாளையம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கிளைச் செயலாளர் சி.வேலுசாமி கந்துவட்டி கும்பலால் கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 பேருக்கு இரட்டை ஆயுள் விதிக்கப்பட்டுள்ளது. குற்றம்சாட்டப்பட்ட 5 பேருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை விதித்து நாமக்கல் மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பள்ளிபாளையம் அக்ரஹாரம் கிளை செயலாளர் சி.வேலுசாமி 2010ல் கொலை செய்யப்பட்டார்.

கந்துவட்டி கும்பலால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட பெண்ணுக்காக புகார் அளித்த போது வேலுசாமி கொலை செய்யப்பட்டார். சிவக்குமார், ராஜேந்திரன், அருண், கணேசன், அன்பு ஆகியோருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. கந்துவட்டி கும்பலால் வேலுசாமி வெட்டி படுகொலை செய்ய்ப்பட்ட வழக்கில் நாமக்கல் மகளிர் விரைவு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

Tags : CBM ,ClichSecretary ,C. Velusami ,Namakkal , CPM, C.Velusamy, murder, 5 persons, 2 life
× RELATED கடந்த அதிமுக ஆட்சியில் 4 ஆண்டுகளாக...