×

டயானா பெயர் சூட்டினர் ஹாரி-மேகன் தம்பதிக்கு 2வது பெண் குழந்தை

லண்டன்: இங்கிலாந்து இளவரசர்  ஹாரி மற்றும் மேகன் மார்க்லே தம்பதிக்கு ஆர்ச்சி ஹாரிசன் என்ற இரண்டு வயது மகன் உள்ளார். மேகன் மார்க்லே நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். இவருக்கு பிரசவத்திற்காக அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள சான்டா பார்பாரா காட்டேஜ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவருக்கு ஜூன் 4ம் தேதி காலை 11.40 மணிக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது. குழந்தையின் எடை 3.48 கிலோ. இந்த குழந்தைக்கு மறைந்த தனது தாய் இளவரசி  டயானா நினைவாக ‘லில்லி’ டயானா என்று பெயரிட்டுள்ளனர். லில்லி, எலிசபெத் ராணிக்கு 11வது பேரப்பிள்ளை ஆவர். தாயும், சேயும் நலமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது….

The post டயானா பெயர் சூட்டினர் ஹாரி-மேகன் தம்பதிக்கு 2வது பெண் குழந்தை appeared first on Dinakaran.

Tags : Diana ,Harri-Meghan ,London ,Prince Harry ,Meghan Markle ,England ,Archie Harrison ,
× RELATED இந்தியருக்கு 16 ஆண்டு சிறை