ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரிமலையில் மரங்களை வெட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்-பூங்கா பராமரிப்பாளர்கள் கோரிக்கை

ஜோலார்பேட்டை :  ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரிமலையில் மரங்களை வெட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பூங்கா பராமரிப்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஜோலார்பேட்டை எடுத்த ஏலகிரி மலை சுற்றுலா தலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. இங்கு பல பொழுதுபோக்கு கூடங்கள் உள்ளதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் நாள்தோறும் வருகின்றனர். இங்குள்ள படகுத்துறை பூங்கா அருகே செடி, கொடிகள், மரங்கள் போன்றவைகள் உள்ளன.

அதன் அருகே தனிநபர்கள் தங்களின் இடத்தில் மரக்கிளைகள் வருவதாக கூறி அதிகாரிகளிடம் அனுமதி வாங்காமல் நேற்று முன்தினம் இரவோடு இரவாக மரக்கிளைகள் மற்றும் ஒரு சில மரத்தை அடியோடு வெட்டி சாய்த்துள்ளனர். மேலும், படகு இல்லம் சுற்றி போடப்பட்டிருந்த முள்வேலியை பிடுங்கி எறிந்துள்ளனர்.

இதனால்,  சுற்றுலா தளத்திற்கு வரும் சுற்றுலாபயணிகள் தடுப்பு வேலி இல்லாததால் படகுத்துறை மற்றும் பூங்காவிற்கு செல்லும் நுழைவாயில் நுழைவு கட்டணம்  வாங்காமல்  உள்ளே வந்து விடுகின்றனர். பராமரிக்க டெண்டர் எடுத்தவர்கள் வருவாய் இழப்பதாக வருத்தம் தெரிவிக்கின்றனர். எனவே, பூங்காயோரத்தில் அதிகாரிகளிடம் அனுமதியுடன் வெட்டி மரங்கள் மற்றும் மரக்கிளைகளை அகற்றப்பட்டனரா? அல்லது அனுமதியின்றி மரங்களை அகற்றினரா? என்பதனை அதிகாரிகள்  ஆய்வு மேற்கொள்ள வேண்டும். மேலும், மரங்களை வெட்டிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து பூங்கா பராமரிப்பாளர்கள் கலெக்டரிடம் இன்று புகார் அளிப்பதாக தெரிவித்துள்ளனர்.

Related Stories: