×

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிரான வழக்கில் தீபா மற்றும் தீபக் ஆகியோரை சேர்த்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: ஜெயலலிதாவுக்கு எதிரான செல்வ வரி வழக்கில் ஜெ.தீபா, ஜெ.தீபக்கை சென்னை உயர்நீதிமன்றம் சேர்த்தது.  வழக்கில் இருந்து ஜெயலலிதாவை விடுவித்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் வருமான வரித்துறை கோரிக்கையை ஏற்று இருவரும் சேர்க்கப்பட்டனர். வழக்கு தொடர்பான ஆவணங்களை இருவருக்கும் வழங்க வருமான வரித்துறைக்கு நீதிபதிகள் ஆணையிட்டனர். மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெ ஜெயலலிதா மீதான செல்வ வரி வழக்கில் அவருடைய உறவினர்களான தீபா மற்றும் தீபக் ஆகியோரை சேர்த்து ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக, 2008-09 ஆண்டுக்கான வருமான வரி  கணக்கை தாக்கல் செய்யாத வழக்கில், வருமான வரித்துறை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்திருந்தது. செல்வ வரி வழக்கில் ஜெயலலிதாவை விடுவித்ததை எதிர்த்து வருமான வரித்துறை தொடர்ந்த வழக்கு இன்று சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா மற்றும் அண்ணன் மகன் தீபக் ஆகியோரை சேர்த்தது. மேலும், இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை தீபா மற்றும் தீபக் ஆகிய இருவருக்கும் வழங்க வருமான வரித்துறைக்கு நீதிபதிகள் ஆணையிட்டனர்.

Tags : Chennai High Court ,Deepa ,Deepak ,CM ,Jayalalithah , Chennai High Court has ordered the inclusion of Deepa and Deepak in the case against the late former chief minister Jayalalithaa
× RELATED நீதித்துறையின் நெறிமுறைகளை மாவட்ட...