×

பதவியேற்பு விழாவுக்கு ஆண்கள் மஞ்சள் நிற டர்பனும், பெண்கள் மஞ்சள் நிற துப்பட்டாவும் அணிந்து வாருங்கள்.: பகவந்த் மான்

சண்டிகர்: பதவியேற்பு விழாவுக்கு ஆண்கள் மஞ்சள் நிற டர்பனும், பெண்கள் மஞ்சள் நிற துப்பட்டாவும் அணிந்து வாருங்கள் என்று பஞ்சாப் மாநிலத்தில் முதல்வராக பதவியேற்க உள்ள பகவந்த் மான் தெரிவித்திருக்கிறார். பஞ்சாப் மாநிலத்தில் நடந்து முடிந்த பொது தேர்தலில் மொத்தம் உள்ள 117 இடங்களில், 92 இடங்களைக் கைப்பற்றி ஆம் ஆத்மி கூட்டணி ஆட்சி பிடித்தது.

இதையடுத்து, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை அவருடைய மாளிகையில் சனிக்கிழமை சந்தித்து ஆட்சியமைப்பதற்கு உரிமை கோரினார் பகவந்த் மான். அதன் பின்னர் ஆளுநரும் ஒப்புக்கொண்டதாக பகவந்த் மான் தெரிவித்தார். இதையடுத்து முதல்வர் வேட்பாளர் பகவந்த் மான் வருகிற 16-ஆம் தேதி பஞ்சாப் முதல்வராக பதவியேற்கிறார். பதவியேற்பு விழா பகத் சிங்கின் கிராமமான கத்கர் கலனில் நடைபெறுகிறது. அவருடன் 16 எம்எல்ஏ-க்கள் அமைச்சர்களாகப் பதவியேற்கின்றனர்.

இந்தநிலையில் தற்போது அவர் கூறியது, பதவியேற்பு விழாவுக்கு ஆண்கள் மஞ்சள் நிற டர்பனும், பெண்கள் மஞ்சள் நிற துப்பட்டாவும் அணிந்து வாருங்கள். பகத்சிங் ஊரான கட்டர் காலனை 16-ம் தேதி மஞ்சள் நிறமாக மாற்றுவோம் என்றும் பகவந்த் மான் கூறியுள்ளார். மேலும் பகத்சிங் மஞ்சள் நிற டர்பன் அணிந்திருந்ததாக கூறி ஆம் ஆத்மி கட்சி அதை விளம்பரப்படுத்தி வருகிறது. இந்த நிலையில் அவரது எம்.பி. பதவியை இன்று ராஜினாமா செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags : Bhagavand Mann , Men wear yellow turbans and women wear yellow dupatta for the inauguration ceremony: Bhagwant Mann
× RELATED பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி...