×

நிபந்தனை ஜாமின்: திருச்சி கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்டார் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

திருச்சி: நிபந்தனை ஜாமினில் வெளியே வந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்  திருச்சி கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்டார். நில அபகரிப்பு மற்றும் திமுக பிரமுகர் மீது தாக்குதல் உள்பட ஜெயக்குமார் மீது 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டனர். சென்னை மாநகராட்சி 49-வது வார்டுக்குட்பட்ட வாக்குச்சாவடி ஒன்றில் கள்ள ஓட்டுப்போட முயன்றதாக தி.மு.க. பிரமுகர் நரேஷ் என்பவரை தாக்கி அவரது சட்டையை கழட்டி கைகளை கட்டி இழுத்து வந்ததாக பதிவான வழக்கில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டார். அதன்பிறகு சாலை மறியலில் ஈடுபட்டதாக அவர் மீது 2-வது வழக்கும், ரூ.5 கோடி மதிப்புள்ள மீன் வலை தொழிற்சாலை அபகரிப்பு தொடர்பாக 3-வது வழக்கும் பதிவு செய்யப்பட்டன.

கடந்த 3-ஆம் தேதி நடைபெற்ற விசாரணையின் போது அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு சென்னை ஐகோர்ட்டு நிபந்தனை ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது. மேலும் நில அபகரிப்பு வழக்கிலும் வெள்ளிக்கிழமையன்று ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. திருச்சியில் தங்கியிருந்து அங்குள்ள கண்டோமெண்ட் காவல் நிலையத்தில் 2 வாரங்களுக்கு கையெழுத்திட வேண்டும் என்று நிபந்தனை விதித்திருந்தது. நிபந்தனை ஜாமினில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வெளியே வந்தார். சென்னை புழல் சிறையில் இருந்து கடந்த 12-ம் தேதி விடுதலை செய்யப்பட்டார். இதை தொடர்ந்து இன்று திருச்சி கண்டோன்மென்ட் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்டார்.


Tags : Jamin ,Ajaragi ,Tiruchi Condonment ,police station ,minister ,Jayakumar , Conditional bail, signed at Cantonment Police Station, Jayakumar
× RELATED கவிதா ஜாமின் வழக்கு: டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் இன்று விசாரணை