×

மலேசியா, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா நாடுகளில் சக்தி வய்ந்த நிலநடுக்கம்; மக்கள் வீதிகளில் தஞ்சம்.!

மலேசியா: மலேசியாவில் சக்தி வய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அலவில் 6.8 ஆக பதிவான நிலநடுக்கத்தால் அங்குள்ள கட்டிடங்கள் குலுங்கின. பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் இருந்து 157 கிலோ மீட்டர் தொலைவில் லூசன் தீவு பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் இது 6.4 ஆக பதிவானதாக  நில அதிர்வு கண்காணிப்பு தேசிய மையம் தெரிவித்துள்ளது. இதேபோல் மலேசியாவின் கோலாலம்பூரில் இருந்து 504- கிலோ மீட்டர் தொலைவில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது 6.8 ரிக்டர் அளவாக பதிவாகி உள்ளது.  

இந்த சக்தி வாயந்த நிலநடுக்கத்தால்  வீடுகள், கடைகள், வணிக வளாகங்கள் குலுங்கின.
இதனால் பீதியடைந்த மக்கள் அலறிஅடித்து வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள சேதவிவரங்கள் குறித்த அதிகாரபூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை. மேலும் இந்தோனேசியாவில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.7 ஆக பதிவாகி உள்ளதாக அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tags : Malaysia ,Philippines ,Indonesia , Powerful earthquake shakes Malaysia, Philippines, Indonesia; People take refuge in the streets.!
× RELATED பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு பிரமோஸ் சூப்பர்சானிக் ஏவுகணை வழங்கிய இந்தியா.!