மே.வங்க மக்களவை இடைத்தேர்தல் சத்ருகன் சின்காவுக்கு மம்தா பானர்ஜி சீட்

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் காலியாக உள்ள அசன்சால் மக்களவை தொகுதி, பாலிகஞ்ச் சட்டமன்ற தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 12ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில், அசன்சால் தொகுதிக்கு சத்ருகன் சின்காவையும், பாலிகஞ்ச் தொகுதிக்கு பாபுல் சுப்ரியோவையும் திரிணாமுல் தலைவர் மம்தா வேட்பாளராக அறிவித்துள்ளார். அசன்சோல் தொகுதியில் பாஜ சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட பாபுல் சுப்ரியோ கடந்தாண்டு திரிணாமுல் காங்கிரசில் சேர்ந்தார். பின்னர், தனது எம்பி பதவியையும் ராஜினாமா செய்ததால் அங்கு இடைத்தேர்தல் நடக்கிறது.  முன்னாள் ஒன்றிய அமைச்சரான சத்ருகன் சின்கா, கடந்த 2014ம் ஆண்டு பாட்னா சாகிப் தொகுதியில் இருந்து பாஜ சார்பில் நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். பிரதமர் மோடியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் காங்கிரசில் சேர்ந்தார். சில மாதங்களுக்கு முன் திரிணாமுல் காங்கிரசுக்கு தாவினார். அமைச்சர் பதவி வகித்த சுப்ரதோ முகர்ஜி காலமானதை தொடர்ந்து, பாலிகஞ்ச் தொகுதிக்கு இடைதேர்தல் நடக்கிறது.

Related Stories: