கடம்பத்தூர் ஒன்றியத்தில் ஏழை பெண்களுக்கு தாலிக்கு தங்கம்: வி.ஜி.ராஜேந்திரன் எம்எல்ஏ வழங்கினார்

திருவள்ளூர்: கடம்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பாக ஏழை பெண்களுக்கு தாலிக்கு தங்கம் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட சமூக நல அலுவலர் ஹிதாயத்துன் நூரியா தலைமை வகித்தார். ஒன்றிய குழு தலைவர் சுஜாதா சுதாகர், ஒன்றியக் குழு துணை தலைவர் சரஸ்வதி ரமேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் எம்.ராம்குமார், வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் வி.ஜி.ராஜேந்திரன் எம்எல்ஏ கலந்துகொண்டு கடம்பத்தூர் ஒன்றியத்தில் உள்ள 223 ஏழை பெண்களுக்கு தாலிக்கு தங்கம் வழங்கினார். இதில் மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் கே.திராவிட பக்தன், ஒன்றிய செயலாளர் மோ.ரமேஷ், மாவட்ட கவுன்சிலர் சரஸ்வதி சந்திரசேகர், ஊராட்சி தலைவர் தமிழ்செல்வி ரமேஷ், ஒன்றிய கவுன்சிலர் கார்த்திகேயன், கண்காணிப்பாளர் பார்த்திபன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Related Stories: