பைக் மீது லாரி மோதி வாலிபர் பரிதாப பலி: உறவினர்கள் சாலை மறியல்; பொன்னேரி அருகே பரபரப்பு

பொன்னேரி: ஆண்டார்குப்பம்  அருகே முஸ்லிம் நகர் பகுதியை சேர்ந்தவர்  ஆபித்(20). இறைச்சிகடையில் பணிபுரிந்து வந்தார். கடந்த 2 தினங்களுக்கு முன்பு இருசக்கர வாகனத்தில் முனீர் என்பவருடன் சென்றார். ஆண்டார்குப்பம் அருகே சென்றபோது அவ்வழியே வந்த லாரி திடீரென இவர்கள் பைக் மீது மோதியது. இதில் இருவரும் தூக்கிவீசப்பட்டனர். இந்த விபத்தில் ஆபித் சம்பவ இடத்திலேயே ரத்தவௌ்ளத்தில் பரிதாபமாக பலியானார். இதுகுறித்து பொன்னேரி போலீசாரிடம் உறவினர்கள் புகார் கொடுத்தனர். ஆனால் போலீசார் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கவில்லை.

மேலும், பிரேத பரிசோதனை முடிந்து 3 நாட்களாகியும் சடலத்தை வாங்க உறவினர்கள் மறுத்துவிட்டனர். இந்நிலையில், விபத்து ஏற்படுத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஆபித்தின் உறவினர்கள் நேற்று பொன்னேரி - தச்சூர் சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த பொன்னேரி டிஎஸ்பி (பொ) சாரதி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதையடுத்து சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து அனைவரும் கலைந்து சென்றனர். மறியல் போராட்டம் காரணமாக அப்பகுதியில் சுமார் ஒருமணி நேரம் போக்குவரத்து பாதித்தது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: