×

அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தகவல் தேர் திருவிழாவில் விபத்துகள் ஏற்படாதவாறு நடவடிக்கை

சென்னை: இந்து சமய அறநிலையத்துறை கட்டுபாட்டில் உள்ள கோயில்களில், மணமக்களில் ஒருவர் மாற்றுத்திறனாளியாக இருப்பின் அவர்களுக்கு நடைபெறும் திருமணத்திற்கான கட்டணம் வசூலிக்கப்படமாட்டாது. இந்த திட்டத்தின் கீழ் மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பின் அறக்கட்டளை சார்பில் நித்யானந்தம் வசந்தி மற்றும் அண்ணாமலை ராதா ஆகிய தம்பதிகளுக்கு அறநிலையத்துறை அமைச்சார் சேகர்பாபு திருமணத்தை நடத்தி வைத்தார். தொடர்ந்து, அவர் அதற்கு உண்டான சான்றிதழையும் வழங்கினார்.

பின்னர் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது: திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு இந்து சமய அறநிலையத்துறையில் வரலாறு காணாத அளவிற்கு பல்வேறு பணிகள் மற்றும் திட்டங்கள் முதல்வரின் வழிகாட்டுதல்களோடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு இந்து சமய அறநிலையத்துறையின் பொற்காலமாக பார்க்கப்படுகிறது.  கடந்த ஆட்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு கோயிலில்களில் இலவச திருமணம் நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தபோது ஏற்கவில்லை.

திமுக அரசு பொறுப்பேற்றதும் மாற்றுத்திறனாளிகளுக்கு கோயிலில்களில் இலவச திருமணம் திட்டம் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் இதுவரை 100க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இது போன்று நடந்ததில்லை. இது போன்ற திருமணங்கள் தொடர வேண்டும். சிதம்பரம் கோயில் விவகாரம் குறித்து சட்ட வல்லுனர்களோடு ஆலோசனை  நடத்தி வருகிறோம். இணை ஆணையர் தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விசாரணை அறிக்கை பெற்றதும் இந்த பிரச்னை குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் மேற்பார்வையில் ஆலோசனை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும்.

கோயில்களில் பல்வேறு வகையிலான தேர்கள் உள்ளன. இனி வரும் காலங்களில் தேர் திருவிழாக்களில் விபத்துகள் ஏற்படாத வகையில் முன்னேற்பாடுகள் எடுக்கப்படும். முன்னாள் முதல்வர் கலைஞர் நினைவு நாளை முன்னிட்டு தொடங்கப்பட்ட 1 லட்சம் தல மரங்கள் நடும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. இதுவரை 80 ஆயிரம் மரங்கள் நடப்பட்டுள்ளது. 1 லட்சத்துக்கு அதிகமான மரங்கள் நடப்படும். கோயில் குளங்களில் பாசிகள் படர்வகை தடுப்பதற்காக வடபழனி முருகன் கோயிலில் வல்லுநர் குழுவானது ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Minister ,Charity ,Sekarbabu Information Chariot Festival , Minister of Charity Sekarbabu Information Chariot Festival to prevent accidents
× RELATED தீ தொண்டு நாள் கடைபிடிப்பு