மாணவர்கள் மீட்பு பிரதமருக்கு ஓபிஎஸ் நன்றி

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதம்: உங்கள் துடிப்பான தலைமையின்கீழ் உள்ள இந்திய அரசு, போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைனில் இருந்து அனைத்து இந்திய மாணவர்களையும் மட்டுமல்லாமல், பாகிஸ்தான்  மற்றும் வங்காளதேச குடிமக்களையும் வெளியேற்றி ‘ஆபரேஷன் கங்கா’வை மாபெரும்  வெற்றியடை செய்தது. ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய இரு நாடுகளின்  ஒத்துழைப்போடு அங்கு சிக்கிய மாணவர்களை பாதுகாப்போடு வெளியேற்றியது, வெளிநாடுகளுடன் பிரதமருக்கு உள்ள ராஜதந்திரம் மற்றும் நல்லுறவின் உச்சத்தை காட்டுகிறது. உக்ரைனில் இருந்து அனைத்து இந்தியர்களையும் வெளியேற்றுவதற்கு இந்திய அரசு எடுத்த விரைவான மற்றும் பயனுள்ள நடவடிக்கைக்கு அதிமுக சார்பாகவும், தமிழக மக்கள் சார்பாகவும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

Related Stories: