×

மஞ்சிமாவுடனான காதலை உறுதி செய்த கவுதம் கார்த்திக்: டிசம்பர் மாதம் திருமணம்

சென்னை: நடிகர் கார்த்திக், நடிகை ராகினி தம்பதி யின் மூத்த மகன் கவுதம் கார்த்திக். இவர், மறைந்த நடிகர் முத்துராமனின் பேரன். மணிரத்னம் இயக்கத்தில் ரிலீசான ‘கடல்’ என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகமான இவர், தொடர்ந்து பல படங்களில் நடித்தார். கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கிய ‘அச்சம்  என்பது மடமையடா’ என்ற படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர், மஞ்சிமா மோகன். பல படங்களில் நடித்துள்ள அவர், ‘தேவராட்டம்’ படத்தில் கவுதம் கார்த்திக் ஜோடியாக நடித்தார். அப்போது இருவரும் காதலித்தனர். இதையறிந்த இருவீட்டு பெற்றோரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

இதையடுத்து இரண்டு வருடங்களுக்கு மேலாக காதலித்து வரும் கவுதம் கார்த்திக், மஞ்சிமா மோகன் இருவரும் வரும் டிசம்பர் மாதம் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில், கடந்த 11ம் தேதி மஞ்சிமா மோகன் பிறந்தநாளையொட்டி இன்ஸ்டாகிராமில் வாழ்த்திய கவுதம் கார்த்திக், அவருடனான காதலை உறுதி செய்துள்ளார். அவர் வெளியிட்ட பதிவில், ‘பிறந்தநாள் வாழ்த்துகள் மோமோ. உன்னைப் போன்ற ஒரு வலிமையான பெண் என் வாழ்க்கையில் இணைவதை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன். நீ எப்போதும் சந்தோஷமாக இருக்க என் அன்பான வாழ்த்துகள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags : Gautam Karthik ,Manjima , Gautam Karthik confirms love affair with Manjima: Married in December
× RELATED ஆர்யா, கவுதம் கார்த்திக் இணையும் படத்தில் மஞ்சு வாரியர்