×

அடிப்படை வசதிகள் இல்லாத ஊரக, நகர்ப்புற பகுதிகளை மேம்படுத்த நிதி ஒதுக்க வேண்டும்: முதல்வருக்கு கே.பாலகிருஷ்ணன் கடிதம்

சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதம்: தமிழக அரசின் சார்பில் 2022-23ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை சட்டப்பேரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு  பழைய பென்சன் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்கு மாத உதவித் தொகை ரூ.3000 வழங்க வேண்டும். பெண்களுக்கு மாதம் ரூ.1,000 உரிமை தொகை வழங்கிட வேண்டும். முதியோர் உதவி தொகை உள்ளிட்ட அனைத்து உதவி தொகைகளையும் ரூ. 3,000 ஆக உயர்த்திட வேண்டும். சாலை, பூங்கா, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, சுகாதார நிலையம், பள்ளிகள் உள்ளிட்ட அடிப்படை மேம்பாட்டு வசதிகள் இல்லாத ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளில் வசதிகளை ஏற்படுத்திட உரிய நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Tags : K.K. ,Balakrishnan , Allocate funds to improve rural and urban areas without basic facilities: K. Balakrishnan's letter to the Chief Minister
× RELATED வயலில் இரைதேடும் பறவைகள் வங்கிகளில் சந்தேகப்படும்படி