×

உக்ரைனில் பாதுகாப்பு அச்சுறுத்தல் அதிகரித்துள்ளதால் தற்காலிகமாக இந்திய தூதரகம் போலந்துக்கு மாற்றம்.! வெளியுறவுத்துறை அறிவிப்பு

உக்ரைன்: உக்ரைனில் பாதுகாப்பு அச்சுறுத்தல் அதிகரித்துள்ளதால் தற்காலிகமாக இந்திய தூதரகம் போலந்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. உக்ரைனில் பாதுகாப்பு சூழ்நிலை மிக மோசனமான நிலைக்கு சென்று கொண்டிருப்பதால் தூதரகத்தை மாற்ற வெளியுறவுத்துறை முடிவு செய்துள்ளது. உக்ரைனில் உள்ள நிலைமைகளை ஆராய்ந்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என வெளியுறவு அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. உக்ரைன் மீதான ரஷியாவின் போர் தொடர்ந்து நீடித்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில், உக்ரைன் தலைநகர் கீவ் நகரில் செயல்பட்டு வந்த இந்திய தூதரகம் தற்காலிகமாக உக்ரைனின் அண்டை நாடான போலாந்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இந்த தகவலை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் உறுதிபடுத்தியுள்ளது. உக்ரைனில் நாளுக்கு நாள் போரின் தீவிரம் அதிகரித்து வரும் நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்கள் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. போலாந்தில் உள்ள இந்திய தூதரகம் போலாந்து நாட்டின் தலைநகர் வார்சா நகரில் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


Tags : Indian Embassy ,Poland ,Ukraine ,State Department , Indian embassy temporarily relocated to Poland due to increased security threat in Ukraine. Foreign Office Notice
× RELATED உக்ரைனில் ரஷ்யா நடத்திய ஏவுகணைத்...