மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வங்கி கடன் மேளா நடத்த அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழக அரசு உத்தரவு

சென்னை: மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வங்கி கடன் மேளா நடத்த அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளை சுய தொழில் செய்ய ஊக்குவிக்க தமிழ்நாடு முழுவதும் வங்கிக்கடன் மேளா நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு திட்டம், வங்கிக் கடன் மற்றும் சுயதொழில் புரிவதை ஊக்குவிக்கும் வகையில் வங்கிக் கடன் மேளா நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மத்திய அரசு, மாநில அரசு சார்பாக  மாற்றுத்திறனாளிகளுக்காக பல்வேறுவிதமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அவர்களுக்கான கடன் உதவி வங்கிக் கடன் மேளா மூலமாக வாழ்வை மேம்படுத்திக்கொள்வதற்கும் பல்வேறு சுயதொழில் தொடங்குவதற்கும் வாய்ப்பு ஏற்படும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் மாற்றுத்திறனாளிகளுக்கான வங்கிக் கடன் மேளா உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Stories: