×

தாம்பரம் நீதிமன்றத்தில் நடந்த லோக் அதாலத்தில் 164 வழக்குகளுக்கு தீர்வு: ரூ.65 லட்சம் இழப்பீடு

தாம்பரம்: தாம்பரம் நீதிமன்றத்தில் நடைபெற்ற லோக் அதாலத் மூலம் 164 வழக்குகள் தீர்வு காணப்பட்டு, ரூ.65 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டது. நீதிமன்றங்களில் வழக்குகள் அதிகப்படியாக தேங்குவதை தவிர்ப்பதற்கும், நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு எளிதாக தீர்வு காணவும், தேசிய லோக் அதாலத் எனப்படும் மக்கள் நீதிமன்றம் உதவுகிறது. இதில், சட்டப் பணிகள் ஆணைக் குழு சட்டம் 1987-ன் படி, பொதுமக்கள் தங்களது வழக்குகளை சமரசமாக தீர்த்துக்கொள்ளலாம்.

குறிப்பாக, நிலுவையிலுள்ள உரிமையியல் (சிவில்), சமரசத்திற்கு உரிய குற்றவியல் (கிரிமினல்) வழக்குகள், மோட்டார் வாகன விபத்து வழக்குகள், குடும்ப நல வழக்குகள், ஜீவனாம்ச வழக்குகள், காசோலை சம்பந்தப்பட்ட வழக்குகள் ஆகியவை லோக் அதாலத்தில் விசாரிக்கப்பட்டு சமரசமாகத் தீர்வு காணப்படும். இதன் மூலம் கால விரயம் தவிர்க்கப்படுகிறது. இந்த லோக் அதாலத்தில் வழக்குகளை தீர்த்துக்கொள்ள கட்டணம் கிடையாது. ஏற்கனவே நீதிமன்றத்தில் நீதிமன்ற கட்டணம் செலுத்தியிருப்பின், செலுத்திய முழு தொகையையும் மீண்டும் திரும்ப பெற்றுக்கொள்ளலாம்.

இரு தரப்பினரும் சமரசமாக செல்வதால், இரு தரப்பினரும் வெற்றி பெற்றவர்களாகக் கருதப்படுவார்கள். இவ்வாறு நீதிமன்றங்களில் அவ்வப்போது நடைபெறும் லோக் அதாலத் மூலம் ஒரே நாளில் ஆயிரக்கணக்கான வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, பல லட்சம் பைசல் செய்யப்படுகிறது. இந்நிலையில், நாடு முழுவதும் நேற்று லோக் அதாலத் நடைபெற்றது. அதன்படி, தாம்பரம் நீதிமன்றத்தில் தேசிய லோக் அதாலத் நேற்று நடைபெற்றது.
இதில், சார்பு நீதிபதி சுல்தான் ஆர்பின் தலைமை வகித்தார். மாஜிஸ்திரேட் சகானா மற்றும் அனுபிரியா, உரிமையியல் நீதிபதி நளினி தேவி ஆகியோரும் தனித்தனியாக  வழக்கு விசாரணையை மேற்கொண்டனர். இதில், 524 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டன. முடிவில் 164 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இவற்றில், 64 லட்சத்து 69 ஆயிரம் ரூபாய் செட்டில்மென்ட்டாக பெற்று கொடுக்கப்பட்டதாக தாம்பரம் சார்பு நீதிபதி சுல்தான் ஆர்பின் தெரிவித்தார்.

Tags : Lok Adalam ,Dambaram , Settlement of 164 cases in the Lok Adalat held at Tambaram Court: Rs 65 lakh compensation
× RELATED தமிழகம் முழுவதும் நடந்த லோக் அதாலத்: 62,559 வழக்குகளில் தீர்வு, ரூ.506 கோடி பைசல்