×

வேதாரண்யம் அருகே 14,000 ஆலிவ்ரிட்லி ஆமை முட்டைகள் பாதுகாப்பு: வனத்துறை தகவல்

வேதாரண்யம் அருகே 14000 ஆலிவ்ரிட்லி ஆமை முட்டைகள் பாதுகாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வெளிவந்த குஞ்சுகள் கடலில் விடப்பட்டன. நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை கடற்கரையில் அழிவின் விளிம்பில் உள்ள அரியவகை இனமான ஆலிவ்ரிட்லி ஆமை முட்டைகள் பொரிப்பகம் கோடியக்கரை வனத்துறை மூலம் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. கோடியக்கரை கடற்கரை ஓரத்தில் ஆண்டு தோறும் டிசம்பர்  முதல் மார்ச் மாதம் வரை நடுக்கடலில் இருந்து ஆலிவ்ரிட்லி ஆமைகள் கோடியக்கரை பகுதிகளுக்கு வந்து குழி தோண்டி முட்டையிட்டு செல்வது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் ஆலிவ் ரிட்லி ஆமைகள் கோடியக்கரை கடற்கரை பகுதிக்கு வந்து முட்டையிட்டு சென்றது.

அந்த முட்டைகளை நாய், நரி, சமூக விரோதிகளிடம் இருந்து பாதுகாக்க அந்த ஆமை முட்டைகளை பாதுகாப்பாக எடுத்து முட்டை பொரிப்பகம் வைத்து பாதுகாக்கப்பட்டது. 45 நாட்கள் முதல் 60 நாட்களில் குஞ்சுகள் வெளிவரும். இந்த ஆண்டு கோடியக்கரை மற்றும் ஆறுகாட்டுத்துறை யில் 132 ஆமைகள் இட்டு சென்ற 14,322 முட்டைகளை வனத்துறையிர் பத்திரமாக  எடுத்து முட்டை பொரிப்பகத்தில் வைத்து  பாதுகாத்து வந்தனர்.

அதில்  மூன்று ஆமைகள் இட்ட 313 முட்டைகளிடம் இருந்து வெளிவந்த  ஆலிவ் ரிட்லி ஆமை குஞ்சுகளை கோடியக்கரை வனத்துறையினர் பாதுகாப்பாக கோடியக்கரை கடலில் விட்டனர். இங்கு விடப்படும் குஞ்சிகள் வளர்ந்து 25 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அந்த ஆமைகள் முட்டையிட அதே பகுதிக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Vidalam , Vedaranyam, 14,000 Olivettle tortoise, eggs, conservation
× RELATED சென்னை கடற்கரை – திருவண்ணாமலை இடையே இன்று முதல் மின்சார ரயில் இயக்கம்