சமத்துவ மக்கள் கழக 7ம் ஆண்டு துவக்க விழா: எர்ணாவூர் நாராயணன் பங்கேற்பு

சென்னை: திருவொற்றியூர், காலடிப்பேட்டையில் சமத்துவ மக்கள் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் நேற்று 7ம் ஆண்டு துவக்க விழா நடந்தது. கட்சியின் நிறுவன தலைவர் எர்ணாவூர் ஏ.நாராயணன் பங்கேற்று, அனைத்து நிர்வாகிகளுக்கும் இனிப்புகள் வழங்கினார். பின்னர் அவரது தலைமையில் நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், தூத்துக்குடி சிப்காட்டில் ₹1000 கோடி மதிப்பில் சர்வதேச அறைகலன் பூங்காவுக்கு அடிக்கல் நாட்டி, தென்மாவட்ட இளைஞர்களுக்கு அதிகளவு வேலைவாய்ப்பு கிடைக்க செய்த முதல்வருக்கு சமக சார்பில் வாழ்த்து தெரிவிக்கிறோம். வரும் ஜூலை 15ல் சமக சார்பில் நடைபெறும் காமராஜர் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் முதல்வரை அழைப்பது உள்ளிட்ட 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் மாநில பொருளாளர் கண்ணன், கொள்கை பரப்பு செயலாளர் சுந்தரேசன், மாணவரணி செயலாளர் கார்த்திக், மாநில துணை செயலாளர் விநாயகமூர்த்தி, மாநில இளைஞரணி துணை செயலாளர்கள் ரவிச்சந்திரன், பாலசேகர், நடராஜன், வர்த்தகர் அணி செயலாளர் சுப்பையா, மாவட்ட செயலாளர்கள் பாஸ்கர், வில்லியம், முனிஸ்வரன், பாலசுப்பிரமணியம், ராஜலிங்கம், ஸ்ரீராம், பழனிமுருகன், மாநில மகளிரணி நிர்வாகிகள் கல்பனா, மாலதி, தேவி, பகுதி செயலாளர்கள் முத்துகுமார், ராஜேஷ், சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: