×

கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழா துவக்கம்: தமிழகத்தில் இருந்து 76 பேர் பங்கேற்பு

ராமேஸ்வரம்: கச்சத்தீவில் புனித அந்தோணியார் ஆலயம் உள்ளது. இந்த அந்தோணியார் ஆலயத் திருவிழா நேற்றுமாலை கொடியேற்றத்துடன் துவங்கியது. இதில் பங்கேற்பதற்காக நேற்று காலை 4 படகுகளில் 76 பேர் ராமேஸ்வரத்தில் இருந்து புறப்பட்டு சென்றனர். வருவாய், காவல் மற்றும் புலனாய்வு துறையினர் கச்சத்தீவு செல்லும் பயணிகள், படகு ஊழியர்களின் ஆவணங்கள், உடமைகள் ஆகியவற்றை பரிசோதனை செய்தனர். தொடர்ந்து வேர்கொட்டு பாதிரியார் தேவசகாயம் தலைமையில் பாதிரியார்கள், மீனவர்கள், 2 பெண்கள் உள்ளிட்ட 76 பேர் கச்சத்தீவுக்கு புறப்பட்டு சென்றனர்.

அவர்களை அரசு அதிகாரிகள் வழியனுப்பி வைத்தனர். இரண்டுநாள் நடைபெறும் திருவிழாவில் இந்தியா - இலங்கை ஆகிய இருநாடுகளில் இருந்து மீனவர்களும் பங்கேற்கின்றனர். எனவே திருவிழாவின்போது இலங்கை கடல்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முன்னிலையில் இருநாட்டு மீனவர்கள் இடையே நல்லிணக்க பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. மீனவர்கள் பேச்சு:   திருவிழா கொடியேற்றத்தை தொடர்ந்து இலங்கை கடல் தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இருநாட்டு மீனவர் பிரதிநிதிகள் பங்கேற்ற பேச்சுவார்த்தை நடந்தது.


Tags : Kachtivu Anthony Temple Festival ,Tamil Nadu , Kachchativu Anthonyar Temple Festival Opening: 76 people from Tamil Nadu participated
× RELATED சுதந்திர போராட்டம் குறித்த பழங்கால...