×

அமெரிக்கா எச்சரிக்கை

ரஷ்யாவில் இருந்து வெளியேறும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு சொந்தமான, ரஷ்யாவில் உள்ள சொத்துகளை பறிமுதல் செய்து தேசிய மயமாக்கப் போவதாக புடின் தெரிவித்தார். இதற்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து வெள்ளை மாளிகையின் ஊடக செயலாளர் ஜென் சாகி தனது டிவிட்டரில், ``வெளிநாட்டு நிறுவனங்களின் சொத்துகளை முடக்கினால், கடந்த 1917ம் ஆண்டில் நடந்ததைப் போல, ரஷ்யா பல ஆண்டுகள் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை இழந்து வாழ வேண்டியதிருக்கும். இது தவிர, அந்நிறுவனங்களின் சட்டபூர்வமான நடவடிக்கைகளையும் எதிர்கொள்ள வேண்டியதிருக்கும். அமெரிக்க நிறுவனங்களுக்கு பைடன் அரசு ஆதரவு அளிக்கும். இதனால் அரசு பல கடுமையான முடிவுகளை எடுக்க வேண்டியதிருக்கும்,’’ என்று எச்சரித்துள்ளார்.

Tags : USA , United States, White House, Warning, Russia
× RELATED அமெரிக்காவில் பரபரப்பு சரக்கு கப்பல்...