3 ஆண்டுகளுக்கு முக்கிய விளம்பரதாரராக சிஎஸ்கே உடன் தொடர்கிறது எஸ்என்ஜே

சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே)  அணியின்  முக்கிய விளம்பரதாரராக  எஸ்என்ஜே குழுமம் அடுத்த 3 ஆண்டுகளுக்கும் தொடர்கிறது. ஐபிஎல் தொடரில் 4 முறை சாம்பியன் பட்டம் வென்ற அணியாகத் திகழ்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ். இந்த நிறுவனத்தின் முக்கிய ஸ்பான்சர் நிறுவனங்களில் ஒன்று எஸ்என்ஜே. கடந்த 2019 முதல்  3 ஆண்டுகளாக  சிஎஸ்கே உடன் இணைந்திருந்த எஸ்என்ஜே குழுமம், அந்த ஒப்பந்தத்தை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீடித்துள்ளது. அதன் மூலம் 2024ம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் வரை சிஎஸ்கே அணியின் முக்கிய விளம்பர நிறுவனங்களில் ஒன்றாக எஸ்என்ஜே தொடரும்.

இந்த ஒப்பந்த நீட்டிப்பு குறித்து   எஸ்என்ஜே குழுமத்தின் தலைவர் எஸ்.என்.ஜெயமுருகன் கூறுகையில், ‘தொடர்ந்து 4வது ஆண்டாக சிஎஸ்கே உடன் பயணிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். இந்தியாவின் விருப்பத்திற்குரிய ஐபிஎல் அணியாக திகழும் சிஎஸ்கே, விருப்பத்திற்குரிய பிராண்டுகளான பிரிட்டீஷ் எம்பயர், எஸ்என்ஜே 10000 ஆகியவற்றின் விளம்பர ஒருங்கிணைப்பாக இருக்கும். அணியின் பிரசார முழக்கம் போல் எங்கள் இணைப்பும்  ‘செம மாஸ்... செம ஸ்ட்ராங்’  ஆக இருக்கும் ’ என்றார்.

சிஎஸ்கே அணியின் தலைமை செயலர் அலுவலர்  கே.எஸ்.விசுவநாதன், ‘எஸ்என்ஜே குழுமத்துடன் எங்கள்  இணைப்பு தொடர்வது மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்த இணைப்பு அடுத்த 3 ஆண்டுகளுக்கு உற்சாகமாகத் தொடரும் என்று நம்புகிறேன். வெற்றிகரமான எங்கள் பயணத்தின் இன்னொரு முன்னேற்றம் இது’, என்றார்.

Related Stories: