சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு 2ம் பருவத்தேர்வு அட்டவணை வெளியீடு

சென்னை: சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்படும் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான இரண்டாம் பருவ தேர்வு அட்டவணை நேற்று வெளியானது. இதன் படி தேர்வுகள் ஏப்ரல் 26ம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ என்னும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் கீழ் பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கான 2022ம் ஆண்டு பொதுத் தேர்வுகள் இரண்டு கட்டமாக நடத்தப்படும் என்று கடந்த 2021 ஜூலை மாதம் அறிவிக்கப்பட்டது.

அதன்படி, முதல் பருவத் தேர்வு ஏற்கனவே திட்டமிட்டபடி நடந்து முடிந்துள்ளது. தற்போது இரண்டாம் பருவத் தேர்வு ஏப்ரல் 26ம் தேதி தொடங்க உள்ளது. இதையடுத்து, பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்புகளுக்கான தேர்வு அட்டவணைகளை சிபிஎஸ்இ தற்போது வெளியிட்டுள்ளது.

Related Stories: