×

உலக தமிழ் வம்சாவழி மாநாட்டில் இந்து சமய அறநிலையத்துறையின் புகைப்பட கண்காட்சி

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, உலக  தமிழ் வசம்சாவழி மாநாடு தமிழக அரசின் 8 ஆம் ஆண்டு நலதிட்ட கண்காட்சியில் இந்து சமய அறநிலையத்துறையின் புகைப்பட கண்காட்சி சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த புகைப்பட கண்காட்சியில் திருக்கோயில் புனரமைப்பு, திருப்பணிகள், குடமுழுக்கு, புதிதாக தொடங்கப்பட்ட பள்ளி, கல்லூரிகள், உலோகத் திருமேனி பாதுகாப்பு மையம், அன்னதானம், திருத்தேர், கோசாலை, வேதபாடசாலை, சொத்துக்களை பாதுகாத்தல், ஆக்கிரமிப்பு அகற்றுதல், திருக்கோயில் மருத்துவ மையம், யானைகள் மருத்துவ முகாம் ஆகியவை புகைப்பட கண்காட்சியில் விளக்கப்பட்டது.

இக்கண்காட்சியில் சுற்றுலா துறை, தமிழ்நாடு வேளாண் பல்கலைகழகம் உள்பட 30 க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. கண்காட்சி முன்புறம் மதுரை மீனாட்சியம்மன் திருவுருவ சிலை வைத்து பூஜை செய்து வருகின்ற பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அர்ச்சனை போற்றி நூல்கள் வழங்கப்பட்டு வருகின்றன. ஆன்மீக புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இக்கண்காட்சியில்   கூடுதல் ஆணையர் ஹரிப்ரியா, இணை ஆணையர் சுதர்சன், ஜெயராமன், திருக்கோயில் திங்களிதழ் ஆசிரியர் சசிக்குமார், திருக்கோயில் செயல் அலுவலர் அருட்செல்வன், கணேசன் மற்றும் பலர் கலந்துக் கொண்டனர்.


Tags : Department ,Hindu ,World Tamil Dynasty Conference , Photo Exhibition at the World Tamil Dynasty Conference
× RELATED அனைத்து கோயில்களிலும் அறங்காவலர்...