ஒரே நாடு ஒரே தேர்தலை அதிமுக என்றும் ஆதரிக்கிறது: தூத்துக்குடியில் மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜு பேட்டி

தூத்துக்குடி: ஒரே நாடு ஒரே தேர்தலை அதிமுக என்றும் ஆதரிக்கிறது என்று முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது வரவேற்கக் கூடியது. பிரதமர் மோடி 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தான் தேர்தல் நடைபெற வேண்டும் என்ற எண்ணத்தில் பிரதமரானதில் இருந்து இந்த கருத்தை சொல்லி வருகிறார். ஒரே நாடு ஒரே தேர்தல் பற்றி பிரதமர் மோடி கூறினால் அரசியல் ரீதியாக பார்க்கப்படும். ஆனால் அதே கருத்தை அதை நடைமுறைப்படுத்துகின்ற தேர்தல் ஆணையமே கூறியிருப்பது வரவேற்கக்கூடியது என்று கூறினார். 2021ல் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வந்திருந்தாலும் அதிமுக வரவேற்று இருக்கும் என்ற கடம்பூர் ராஜு, தமிழகத்தில் தேசிய கட்சிகள் காலூன்ற வாய்ப்பே இல்லை என்றும் தெரிவித்தார்.

தமிழகத்தில் திராவிட கட்சிகளான திமுக, அதிமுகத்தான் மாறிமாறி ஆட்சி அமைக்கும் என்றும் அவர் தெரிவித்தார். இதனிடையே காஞ்சிபுரத்தில் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துக்கொண்ட பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன்சுவாமி, ஒரே நாடு ஒரே தேர்தல் நடைபெற வாய்ப்பே இல்லை என்றார். பிரதமரும், தேர்தல் ஆணையமும் ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து பேசி வரும் நிலையில், பாஜக மூத்த தலைவரான சுப்பிரமணியன்சுவாமியின் எதிர்மறை கருத்து அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது. சேது சமுத்திர திட்டம் முடிவுக்கு வந்துவிட்டதாகவும் அவர் கருத்து தெரிவித்திருக்கிறார்.

Related Stories: