வெற்றி பெற முயற்சி செய்வதற்கு உ.பி. தேர்தல் முடிவு ஒரு பாடமாக அமைந்துள்ளது! பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி பேச்சு ..!!

லக்னோ: உத்திரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலில் ஏற்பட்டுள்ள தோல்வியில் இருந்து பாடம் கற்றுக் கொள்வோம். வெற்றி பெற முயற்சி செய்வதற்கு உ.பி. தேர்தல் முடிவு ஒரு பாடமாக அமைந்துள்ளது என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து பேசிய அவர், பகுஜன் சமாஜ் கட்சியின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப உத்திரப்பிரதேச சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் அமையவில்லை. உ.பி.யில் 2017க்கு முன் பாஜக எந்த நிலையில் இருந்ததோ அந்த நிலைக்கு காங்கிரஸ் தள்ளப்பட்டுள்ளது. தேர்தல் முடிவால் மனம் தளர்ந்து விடமாட்டோம் என்று கூறினார். தோல்வி ஏற்பட்டது ஏன் என்று ஆத்ம பரிசோதனை செய்து, கற்றுக்கொண்டு கட்சியை நடத்திச் சென்று மீண்டும் ஆட்சியை பிடிப்போம்.

பாஜகவின் பீ டீம்தான் பகுஜன் சமாஜ் கட்சி என்ற திசைதிருப்பும் எதிர்மறை பிரச்சாரத்தால் தோல்வி ஏற்பட்டுள்ளது. பாஜகவை அரசியல்ரீதியாக மட்டுமல்லாமல் கொள்கை ரீதியாகவும் பகுஜன் சமாஜ் கட்சி எதிர்த்து வருகிறது என்று மாயாவதி விளக்கமளித்தார். இதனிடையே உத்திரப்பிரதேசத்தில் பாஜக வெற்றி பெற மாயாவதி, ஒவைசி உதவியுள்ளதாக சிவசேனாவின் சஞ்சய் ராவத் குற்றம்சாட்டியுள்ளார். பாஜக வெற்றி பெற உதவிய 2 பேருக்கும் பத்ம விபூஷன், பாரத் ரத்னா விருதுகளை வழங்க வேண்டும் என்றும் அவர் விமர்சித்திருக்கிறார்.

Related Stories: