மீண்டும் வசமாக சிக்கிய ரவுடி பேபி சூர்யா!: ஆதரவாளர்கள் கொலை மிரட்டல் விடுப்பதாக கோவை டிஐஜி அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் புகார்..!!

கோவை: ரவுடி பேபி சூர்யா, சிகந்தர் மீது புகார் கொடுத்த நபர்களுக்கு ஆதரவாளர்கள் கொலை மிரட்டல் விடுப்பதாக கோவை டிஐஜி அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் மனு அளித்துள்ளனர். சமூக வலைத்தளமான யூ டியூபில் ஆபாசமாக பேசி வந்த ரவுடி பேபி சூர்யா, சிகந்தர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கோவை மாவட்ட சைபர் கிரைம் பிரிவில், முத்துரவி என்பவர் பாதிக்கப்பட்ட திலகா தரப்பு சார்பில் புகார் மனு அளித்துள்ளார்.

அதன்பேரில் ரவுடி பேபி சூர்யா, சிகந்தர் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், இருவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்நிலையில் புகார் கொடுத்த காரணத்திற்காக ரவுடி பேபியின் ஆதரவாளர்கள் மூலம் ரவுடி பேபி தங்களுக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக பாதிக்கப்பட்டவர்கள் கோவை டிஐஜி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். அது தொடர்பான ஆதாரங்களையும் அவர்கள் வெளியிட்டுள்ளனர்.

ரவுடி பேபியின் ஆதரவாளர்கள் விடுத்த கொலை மிரட்டலால், புகார் அளித்த திலகவதி தரப்பு தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பதாக வேதனை தெரிவித்துள்ளனர். எனவே தங்களது பாதுகாப்பு கேள்விக்குறியாகி இருப்பதால் கொலை மிரட்டல் விடுத்த ரவுடி பேபியின் ஆதரவாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோவை டிஐஜி-யிடம் கொடுத்த புகார் மனுவில் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories: