×

மேற்கு வங்கத்தில் பலியான நாகை ராணுவ வீரர் உடல் சொந்த ஊரில் அடக்கம்-21 குண்டுகள் முழங்க மரியாதை

கீழ்வேளூர் : மேற்கு வங்கத்தில் பலியான நாகை ராணுவ வீரரின் உடல் 21 குண்டுகள் முழங்க சொந்த ஊரில் நேற்று நல்லடக்கம் செய்யப்பட்டது.நாகை மாவட்டம் கீழையூர் பள்ளிக்கூட தெருவை சேர்ந்தவர் ஞானசேகரன்(45). ராணுவ வீரரான இவர், மேற்கு வங்க மாநிலத்தில் எல்லை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். கடந்த 7ம் தேதி எல்லை பாதுகாப்பு படையை சேர்ந்த வீரர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது நடந்த துப்பாக்கி சூட்டில் ஞானசேகரன் பலியானார். இந்நிலையில் ஞானசேகரன் உடல் மேற்குவங்காளத்திலிருந்து விமானம் மூலம் கோவைக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் அங்கிருந்து ராணுவ வாகனம் மூலம் சொந்த ஊரான நாகை மாவட்டம் கீழையூருக்கு நேற்றுமுன்தினம் இரவு கொண்டு வரப்பட்டது.

பின்னர் ஞானசேகரன் உடல் அவரது வீட்டில் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பொதுமக்கள், அரசியல் கட்சியினர், உறவினர்கள் ஏராளமானோர் ஞானசேகரனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.நேற்று காலை ஞானசேகரன் உடல் அவரது வீட்டில் இருந்து ராணுவ வாகனத்தில் ஊர்வலமாக ஈசனூர் பகுதியில் உள்ள கல்லறை தோட்டத்துக்கு எடுத்து செல்லப்பட்டது.

பின்னர் அங்கு எல்லை பாதுகாப்பு படை வீரர்களின் 21 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதை செலுத்தப்பட்டது. நாகை மாவட்ட டிஎஸ்பி சரவணன், காவல்துறை சார்பில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். ஞானசேகரன் உடல் மீது போர்த்தப்பட்டிருந்த தேசிய கொடியினை எல்லை பாதுகாப்பு படையினர் ஞானசேகரன் குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர். அதன்பிறகு கிருஸ்தவ முறைப்படி நல்லடக்கம் செய்யப்பட்டது.இந்நிகழ்ச்சியில் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள், தமிழ்நாடு காவல் துறையினர், அரசியல் கட்சியினர், பொதுமக்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

Tags : Nagam Military Player ,West Bengal , Lower Vellore: The body of a Naga soldier killed in West Bengal was cremated in his hometown yesterday after 21 bombs exploded.
× RELATED மேற்கு வங்கத்தில் குண்டு வெடித்து சிறுவன் உயிரிழப்பு..!!